Monday, July 14, 2014

இஸ்லாம் மதம் பற்றி - பகுதி 4


காபா என்னும் புனிதத் தலம்:

வரலாற்று ரீதியாக, உண்மையில் காபா பல்வேறு விதமான தெய்வ உருவங்களால் நிரம்பிய பாகனிய கோயிலாகத் தான் இருந்தது.  இறைத் தூதர் ஆபிரகாமால் அது இறை இல்லமாக நிறுவப் பட்டது என்று கூறும் இஸ்லாமிய கருத்தாக்கம் ஒரு முழு கற்பனையே அன்றி வேறில்லை. எனவே, அரேபியாவில் அப்போது வசித்த இந்துக்கள் காபாவில் வழிபட்டு வந்திருக்க்க் கூடும் என்பது விசித்திரமான விஷயமே அல்ல. பாகனிய மனம் எல்லா இடங்களிலும் உள்ள எல்லா தெய்வ உருவங்களையும் இயல்பாக வழிபாட்டுணர்வுடனேயே நோக்கும்.  இக்கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் பொ.பி. 1560 -1620 காலகட்ட்த்தில் வாழ்ந்த புகழ்பெற்ற முஸ்லிம் வரலாற்றாசிரியர் ஃபிரிஷ்டா (Firishta) எழுதுகிறார் – “இஸ்லாமின் தோற்றத்திற்கு முன்,  காபாவிலுள்ள விக்கிரகங்களை வழிபடுவதற்காக இந்தியாவின் பிராமணர்கள்  தொடர்ந்து அங்கு புனித யாத்திரை செய்து கொண்டிருந்தனர்”8. தனக்கு முன்னிருந்த வரலாற்றாசிரியர்களையும் இந்த விஷயத்தில் ஆதாரமாக அவர் குறிப்பிடுகிறார்.

லாத், மனாத் (Lãt, Manãt) என்கிற இரண்டு பிரதான பெண் தெய்வங்கள் முகமது நபி அவர்களை அழிக்க வரும்போது அரேபியாவில் இருந்து ஓடிவிட்டன என்றும் அவை சோமநாதர் கோயிலில் தஞ்சம் புகுந்து விட்டன என்றும் முஸ்லிம்கள் பல காலம் நம்பி வந்தனர். முஸ்லிம் படையெடுப்பாளர்கள் மீண்டும் மீண்டும் இந்தக் கோயிலின் மீது படையெடுத்து வந்ததற்கு அரேபியாவில் உருவான இந்த ஐதிகமும் ஒரு முக்கிய காரணம்.

ஏன் சோமநாதர் கோயில்? ஏனென்றால், இந்தியாவின் மேற்குக்  கடற்கரைப் பகுதியான சௌராஷ்டிரத்தில்  பிரசித்தி பெற்று விளங்கிய அந்தக் கோயில்தான், அங்கிருந்த அரேபிய பாகனியர்களுக்கு முக்கியமான ஒரு புனிதத் தலமாக விளங்கியது,  அரேபியாவில் இருந்த ஹிந்துக்களுக்கு காபா விளங்கியது போல. இது ஒன்றும் அதிஊகம் அல்ல. ஏனென்றால் இதே கடற்கரையில் உள்ள பிரபாச பட்டணம் (Prabhas Patan) இந்திய-அரபு வணிகத்தின் முக்கிய துறைமுகமாக இருந்தது. இஸ்லாமுக்கு முந்தைய காலகட்டங்களிலேயே அங்கு பெருவாரியாக அரபிக்கள் வசித்து வந்ததற்கு வரலாற்று ஆதாரம் உள்ளது. இஸ்லாமுக்குப் பின்வந்த காலங்களிலும், வாகேலா (Vãghelãs) அரசர்களின் காலம் வரை கூட, அரேபியர்கள் இத்துறைமுகத்தில் வசித்து வந்தது குறித்து இந்த நூலின் 3வது அத்தியாயத்தில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

இந்து நினைவில்..

காபா ஒரு சிவாலயம் என்ற இந்து மரபு குரு நானக்கின் காலத்தில் (பொ.பி. 1469 –1539) பரவலாக புழக்கத்தில் இருந்தது. அதைப் பற்றிய குறிப்பு ஜனம் ஸாகி (Janam Sãkhîs) என்ற சீக்கிய புனித நூலில், மக்கே மதினே தீ கோஷாடீ (Makkê-Madinê dî Goshatî) என்ற அத்தியாயத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த மரபு இந்தக் காலகட்டத்தை விட எவ்வளவு  பழமையானது என்பது ஆராயப் படவேண்டும். ஆனால் குரு நானக் கட்டாயம் இந்த மரபைக் கண்டுபிடிக்கவில்லை, அவருக்கு முன்பே அது இருந்தது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் குரு நானக்கின் பயணங்கள் பற்றிய கட்டுரையில் (Guru Nanak’s Travels in the Middle East) பேராசிரியர் சுரீந்தர் சிங் கோஹ்லி எழுதுகிறார் –

“அரேபியாவில் குரு அரபிகள் போன்றே உடையணிந்து கொண்டார். ஒரு கையில் ஒரு தடி, தோளில் தொழுகையின் போது போடும் விரிப்பு, இன்னொரு கையில் குரான் புத்தகம், பாதம் வரை தவழும் நீளமான நீலநிற அங்கி.. இந்த உடையில் ஒரு சூஃபி ஞானி போன்றே அவர் தோற்றமளித்தார். சென்ற இடமெல்லாம் அவரை ஒரு உண்மையான ஃபகீர் என்றே மக்கள் கருதினார்கள். ஜெட்டாவிலிருந்து மெக்காவை நோக்கி குரு கால்நடையாகவே பயணமானார். மாலை மங்கும் நேரத்தில் மெக்காவை அடைந்தார். அங்கு காபாவிற்குப் பின்புறத்தில் உள்ள இறைதூதர் ஆபிரகாமின் நினைவிடத்திற்கு அருகிலேயே படுத்து உறங்கி விட்டார். காலையில் காபா தலத்தின் மேற்பார்வையாளன் ஜிவன் கான் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தான். இறை இல்லத்தை நோக்கிக் காலை நீட்டிப் ப்டுத்துக் கொண்டிருக்கிறீர்கள், அது தகாத்து என்று குருவை எச்சரித்தான்.

அப்போது மெக்காவில் இருந்த முதன்மையான இஸ்லாமிய மத அறிஞர்கள் மௌல்வி முகமது ஹசன், காஜி ருக்ன் தீன், இமாம் ஜஃபார், பீர் அப்துல் பஹாவ் ஆகியோர். அவர்கள் குருவுடன் பல ஆன்மிக விஷயங்கள் குறித்து உரையாடினர். அந்த உரையாடல்களின் விவரங்கள் ஸையத் முகமது கவுஸ் ஸலஸ் ஃபகீர் என்பவரால் பாரசீக மொழியில் அவர் எழுதிய நூலில் பதிவு செய்யப் பட்டன. கியானி கியான் சிங்  கூற்றுப்படி, அந்த விவரங்களைத் தான் பாயி பானா (bhãî Bhãnã) பஞ்சாபியில் மொழியாக்கம் செய்தார்”9.

குரு நானக் பின்வருமாறு கூறினார் – “மெக்கா ஒரு பழமையான புனிதத் தலம்10. மகாதேவரின் லிங்கம் இங்கு இருக்கிறது. முன்பு பிராமணர்களால் சிறப்பாக வழிபடப் பட்டு வந்த்து. அவர்களில் ஒரு பிராமணர் முசல்மானாகி விட்டார். அதர்வ வேதத்தைத் திரித்து அதற்கு ஃபுர்கான் (Furqãn) என்று பெயரிட்டு விட்டார். அவர் பெயர் முகமது. அந்தப் பெயரும் மகாதேவரையே குறிக்கும்11.

ஆனால் அவர் மற்ற எல்லா பெயர்களும் பழுதுபட்டவை என்று கூறி விடவே, ஹிந்துப் பெயர்கள் எல்லாம் மறைந்து எங்கும் முஸ்லிம் பெயர்களே புழக்கத்துக்கு வந்து விட்டன12.  அவர் கடவுளின் பெயரால் பேசினார். ஆனால் பசுக்களை அறுத்துக் கொல்வதை ஆதரித்தார்.  எல்லா பிராமணர்களும் தர்ம நெறியிலிருந்து தவறும் நிர்ப்பந்தம் ஏற்பட்ட்து, ஆயினும் அவர்கள் தொடர்ந்து கடவுளிடம் முறையிட்டுக் கொண்டிருந்தனர். கடவுள் ஒருவரே என்று கலீமா கூறுகிறது, ஆனால் முகமது தனது பெயரையும் கடவுளது பெயருடன் சேர்த்துக் குழப்பிக் கலந்து விட்டார். அனைவரும் முசல்மான்களாக வேண்டும் என்று உலகம் முழுவதற்கும் அவர் ஆணை பிறப்பித்தார். மன உறுதியுள்ள பலர் அவரது ஆணையை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் ஆசையின் வசப்பட்டவர்கள் பலர் அவரைப் பின்பற்றத் தொடங்கினர். ஒரு விதமான மதக் கொள்கையை அவர் உருவாக்கி அவர்களுக்குக் கற்பித்தார்.  மக்களைக் கொள்ளையடிப்பதற்காகவே அவர்கள் அவருடன் சேர்ந்தனர். வேறு எந்த நோக்கத்திற்காகவும் அவர்கள் அவருடன் சேரவில்லை”.13

இது குரு நானக் கூறியதாக மேற்குறிப்பிட்ட நூலில் வருவது.

இஸ்லாமுக்கு முந்தைய காலத்திய அரபிக்களில் இந்துக்கள் இருந்தார்கள் என்பதற்கோ,  அவர்களுக்கு ஹிந்துப் பெயர்கள் இருந்தன என்பதற்கோ, பிராமணர்கள் வழிபட்டார்கள் என்பதற்கோ, அதர்வ வேதத்தை அறிந்திருந்தார்கள் என்பதற்கோ,  இதுவரை  மிக உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை14. ஆனால் இஸ்லாமின் வருகைக்குப் பின் அரேபியாவில் என்ன நிகழ்ந்தது என்பது பற்றிய இந்து அகதிகளின் நினைவுகள் ஜனம் ஸாகி நூலில் பதிவாகியிருப்பதாகக் கருத இடமிருக்கிறது.  இஸ்லாம் படையெடுத்த இடங்களில் எல்லாம், அங்கு வசித்த இந்துக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடவேண்டிய நிலை எற்பட்டது என்பதை முஸ்லிம் வரலாற்றாசிரியர்களே ஆவணப் படுத்தியுள்ளனர். ரோமப் பேரரசு கிறிஸ்தவர்களால் கையகப் படுத்தப் பட்டபோதும் இதுவே நிகழ்ந்தது.

உலகில் எல்லா இடங்களிலும் பொது மக்கள் வரலாற்று நிகழ்வுகளை தங்கள் கலாசாரத்தின் மொழியிலேயே நினைவுறுத்திப் புரிந்து கொள்ளும் பழக்கத்தால் பீடிக்கப் பட்டிருக்கிறார்கள். குரு நானக்கிடம் இந்தக் கதை வந்து சேர்ந்த காலத்திலோ, அல்லது அதற்கும் முந்தைய காலகட்டத்திலோ, இந்துக்களின் நினைவில் காபா ஒரு சிவாலயமாகவும், அங்குள்ள பிரதான தெய்வம் சிவலிங்கமாகவும் பதிந்து போயிருக்கலாம். காபாவில் வழிபாடு நடத்திய பாகனிய பூசாரிகளை பிராமணர்களாகவும், குரானை அதர்வ வேதத்தின் பொய்யான திரிபாகவும் அவர்கள் அர்த்தப் படுத்திக் கொண்டிருக்கக் கூடும். தெளிவாக விளங்கும் விஷயம் என்னவென்றால், இஸ்லாம் உருவான அந்த தருணத்தில் அரேபியாவில் குடியிருந்த அல்லது அங்கு சென்றிருந்த இந்துக்கள், அரேபியாவின் பழம்பெரும் மத்த்தைப் புரட்டிப் போட்டு புதிய நம்பிக்கை முறைகளை பலாத்காரமாகப் புகுத்திய அந்தப் “புரட்சி”யை சுத்தமாக விரும்பவில்லை; அதைப் பற்றிய நல்லெண்ணம் எதுவும் அவர்களுக்கு இல்லை.

நபியைப் பற்றியும், அவரைப் பின்பற்றுபவர்களைப் பற்றியும் இந்துக்கள் மனதில் அப்போது உருவான பிம்பம் மிகச் சரியானதே என்று பிற்காலத்தில் அவர்களது தாயகத்தில் இஸ்லாம் விளைவித்த அனுபவங்கள் தெள்ளத் தெளிவாக நிரூபித்து விட்டன.  ஒரு மாபெரும் மத உபதேசகராக நபியை நிலைநிறுத்தி, ஒரு அமைதி மார்க்கமாக இஸ்லாமுக்கு வெள்ளையடித்துக் கற்பிக்க இந்திய அரசு இயந்திரம் முழுவதும் சேர்ந்து இமாலய முயற்சிகள் செய்து வருகிறது. ஆனாலும் கூட, இன்று வரை தொடர்ந்து வரும் இந்தக் கதையை மாற்ற வேண்டிய எந்த அவசியமும் இந்துக்களுக்கு இல்லாமல் போய்விட்டது என்பது தான் நிஜம்.

எப்படியானாலும், காபாவை முன்வைத்து நான் எழுதிய இந்த விஷயங்கள் இத்துறையில் உள்ள வரலாற்றாசிரியர்களால் மேலும் தீவிர ஆய்வுகளுக்கு உட்படுத்தப் படவேண்டும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment