தெரிந்து கொள்ளுங்கள்
//முஷ்லீம் தினமும் ஐந்து வேளை தொழுகிறான்
கிறுத்தவன் தினமும் பைபிள் வாசிக்கிறான் .
இந்துக்கள் ...உண்மையை சொல்லுங்கடா கோயிலுக்கு போய் எத்தனை மாசம் ஆச்சு ..//
இந்துக்கள் கோயில் சென்றாலும் யாரும் கேள்வி கேட்க போவதில்லை. செல்லாவிட்டாலும் யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. ஆக, ஒரு இந்து யாருடைய கட்டாயத்தின் பெயரிலும் கோவிலுக்கு செல்வதில்லை. இந்துக்கள்் கடவுள் உண்மையில் இருக்கிரார் என்று வாழ்க்கையில் தெளிந்த பின்னர் தான் கோவிளுக்கு செல்கின்றனர். இந்த சுதந்திரம் தான் உண்மையான ஆன்மிகத்துக்கும், கடவுள் நம்பிக்கைக்கும் வழிவகுக்கும். கடவுளை வாழ்க்கை அனுபவத்தில் இருந்து அறிந்து கொண்டால்தான் அது நிலைத்து நிற்க்கும். இதை ஒரு சடங்காக செய்தால் அதில் பயனில்லை...
அனுபவத்தின் மூலம் கடவுளை அறிந்து கொள்வதை பரஞானம் என்றும், சாஸ்திர புஸ்தகங்கள் வாயிலாக அறிந்து கொள்வது அபரஞானம் என்றும் இந்துக்கள் அழைப்பர். ஆக பக்தி என்பது தனிமனிதனின் மனம் சார்ந்த சுதந்திரம் .இது கட்டாயம் ஆக்கப் பட்டால், இது ஒரு வேளையாகவும், சுமையாகவுமே அனேகருக்குத் தெரியும்.
No comments:
Post a Comment